அமெரிக்க இடைத்தேர்தல் ; உச்ச நீதிமன்றத்தில் அவசர அவசரமாக ட்ரம்ப் முன்வைத்த கோரிக்கை

அமெரிக்க இடைத்தேர்தலுக்கு முன்னதாக, கலிபோர்னியா மாநிலத்தில் சுமார் 20,000 வாக்காளர்களின் வாக்குச் சீட்டுகளைத் தனியாகப் பிரித்து (Segregate) பாதுகாக்குமாறு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்துள்ளது.
கலிபோர்னியா மாநிலத்தில் குடியுரிமை இல்லாதவர்கள் வாக்களித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் வாக்குச் சீட்டுகளைத் தனியாகப் பிரித்து வைக்க வேண்டும் என்றும், அவற்றை ஆய்வு செய்த பின்னரே எண்ண வேண்டும் என்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் நீதித்துறை கோரியுள்ளது.

முன்னதாக, இந்த கோரிக்கையை நிராகரித்த கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி, வாக்குச் சீட்டுகளைத் தனியாகப் பிரிப்பது ஜனநாயக அமைப்பின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
இதனை எதிர்த்தே தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க செனட் சபையைக் கைப்பற்றுவதில் ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், இந்த சட்டப் போராட்டம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![]()