இலங்கை

ஜென்ஸி தலைமுறையை குறிவைத்து ரணில் வியூகம் வகுப்பு

“ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்தால் வெற்றிபெற்றுவிடலாம் எனச் சிலர் கருதுகின்றனர். ஆனால், தற்போது அரசியல் கட்டமைப்பு முழுமையாக மாறியுள்ளது. கட்சிகள் ஒன்றிணைவதன் மூலம் மாத்திரம் வெற்றிபெற முடியாது. புத்தாக்கங்களையும் உள்வாங்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மிலேனியம் மற்றும் ஜென்ஸி தலைமுறையினர் இன்றைய அரசியலில் முக்கிய சக்திகளாகத் திகழ்கின்றனர். எனவே, இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் எமது கட்சியிலும் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதற்கமைய, ‘ஜென்ஸி ஐக்கிய தேசியக் கட்சி’ (Gen Z UNP) மற்றும் ‘மிலேனியம் ஐக்கிய தேசியக் கட்சி’ (Millennium UNP) ஆகிய இரு குழுக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாரம்பரிய வாக்குகளுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறதோ, அதே அளவுக்கு இளம் தலைமுறையினரின் வாக்குகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *