இலங்கை

பதவி விலகும் கடிதம் தயார்..! சுமந்திரன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…

தமிழ் தேசிய அரசியலை பார்க்கப்போனால், தற்போது தேசிய மக்கள் சக்திக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கக்கூடிய தமிழரசுக் கட்சியின் பதில் பொதுசெயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் கடந்தகால மற்றும் நிகழ்கால நிலைப்பாடுகள் எப்படி மாறுபட்டிருக்கின்றன என்பது குறித்து பெரும் கேள்வி எழுகின்றது.

ஒரு கொள்கை தலைவன் அல்லது ஒரு மக்கள் தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில வரையறைகளை மக்கள் தலைவர்களாக இருந்த ஒவ்வொரும் வழிகாட்டி சென்றிருக்கின்றார்கள்.

பல்வேறுபட்ட விமர்சனங்களை கடந்து சிலர் அந்த வழிகளிலேயே பயணித்திருக்கின்றார்கள். ஆனால், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுசெயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அவ்வாறு செயற்படுகின்றாரா என சந்தேகம் எழுகின்றது.

இதற்கிடையில், அவர் தனது உரையில் “தேசிய மக்கள் சக்தி அரசு ஆபத்தானது, இதனை நாங்கள் ஏற்க கூடாது. இதனை நிராகரிக்க வேண்டும். இந்த சட்டங்கள் பல்வேறுபட்ட நெருக்கடிகளை கொடுக்கிறது” என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.

குறிப்பாக சொல்லப்போனால் அமைச்சு பதவிகளை பெறுவதற்கான சந்தர்ப்பம் வந்தால் பரிசீலிப்போம் என்று கூறுகிறார். ஆனால், இதே சுமந்திரன் கடந்த காலங்களில் எப்படி செயல்பட்டிருக்கிறார் என்கின்ற கேள்வியும் இருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *