உலகம்

உலக வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் வாக்களித்த பாப்பரசர்

எதிர்வரும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்காக பரிசுத்த பாப்பரசர் பதினான்காம் லியோ (Pope Leo XIV) அஞ்சல் மூலம் வாக்களித்துள்ளார்.

இதன்மூலம் உலக வரலாற்றில் முதலாவது ஜனநாயகத் தேர்தலில் வாக்களித்த பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அமெரிக்கக் குடிமகனான இவர், தனது அஞ்சல் வாக்களிப்புப் பத்திரத்தை சிக்காகோ நகருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கக் குடியுரிமை
ஜனநாயகச் செயல்பாடுகளில் பங்கேற்பது குடிமக்களின் உரிமை மட்டுமின்றி பொறுப்பும் கூட என்பதை பரிசுத்த பாப்பரசர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இணையத் தகவல்களின் படி, இதற்கு முன்னர் எந்தவொரு பாப்பரசரும் ஜனநாயகத் தேர்தலில் வாக்களித்ததில்லை.

இவர் ஒரு நாட்டின் தலைவராக இருந்தபோதிலும், தனது அமெரிக்கக் குடியுரிமை மூலம் வழங்கப்பட்ட உரிமையின் கீழேயே வாக்களித்துள்ளமை சர்வதேச கவனம் பெற்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *