இலங்கை

ஞானசார தேரரை விடுவிப்பதற்கான போராட்டத்தில் இருந்து நாம் பின்வாங்கவில்லை; போராட்டம் ஓயவில்லை – பிக்குகள் எச்சரிக்கை

ஞானசார தேரரை விடுவிப்பதற்கான போராட்டத்தில் இருந்து நாம் பின்வாங்கவில்லை. எமது போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்று உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.

நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

“விகாரமகாதேவி பூங்காவிலிருந்து நாம் வெளியேறிவிட்டோம் என்பதற்காக எமது போராட்டம் முடிவடைந்துவிடவில்லை. ஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதற்கான போராட்டத்தைக் கைவிடவில்லை. அந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்தி, மக்களின் மனநிலை என்ன என்பதை இந்த அரசாங்கம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆட்சியைக் கவிழ்ப்பது எமது நோக்கமல்ல. ஆனால், பௌத்த சாசனம், துறவற ஆடை, பௌத்த கலாசாரம் மற்றும் மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த பௌத்த விரோத அரசாங்கத்திடமிருந்து பௌத்த சாசனத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *