உலகம்

மீண்டும் ஒரு போரா? புடினின் எச்சரிக்கையால் அதிரும் உலகம்

ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் ரஷ்யா ஆதரிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஐரோப்பாவுடன் ஏற்படக்கூடிய போருக்கு ரஷ்யா தயாராக உள்ளதாகவும், ஆனால் அத்தகைய போரை அது விரும்பவில்லை என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நோர்வே மற்றும் பின்லாந்து தலைவர்களுடனான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகே ஜனாதிபதி புடின் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர பதற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி, இந்த நிலைமை எல்லையைத் தாண்டி தீவிரமடைந்தால் எந்தவொரு தரப்பாலும் வெற்றியைப் பெற முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி பகுதி எதிர்கொள்வதைப் போன்ற பதற்றமான மற்றும் மோதல்கள் நிறைந்த சூழலை பால்கடிக் பிராந்தியம் எதிர்கொள்வதை மாஸ்கோ நிர்வாகம் விரும்பவில்லை என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளவும், ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மீண்டும் சீரமைக்கவும் ரஷ்யா தயாராக இருப்பதாகவும், அதேவேளையில் பால்கடிக் பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்றும் அவர் எச்சரித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *