உலகம்

ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் உக்ரைன் ரயில் நிலையத்தில் 14 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் டினிப்ரோ (Dnipro) நகரில் உள்ள ரயில் நிலைய நடைமேடையில் ரஷ்ய ட்ரோன் ஒன்று மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (29) இடம்பெற்ற இந்தத் தாக்குதலுக்கு ஐரோப்பிய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, இந்தத் தாக்குதலைக் கொடூரமான மற்றும் அழிவுகரமான தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ளதுடன், ரஷ்யாவுக்கு எதிரான அழுத்தத்தை மேலும் அதிகரிக்குமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், ரஷ்யா மேலும் பல பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், டினிப்ரோ நகரில் இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதலில் மாணவர் விடுதியொன்று தீப்பற்றியுள்ளதுடன், இந்தத் தாக்குதல்களால் சுமார் 350,000 வீடுகளுக்கான மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *