உலகம்

எத்தியோப்பியாவில் பொதுமக்கள் தங்கியிருந்த முகாம் மீது ட்ரோன் தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியாவின் அம்ஹாரா (Amhara) பிராந்தியத்தில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் பொதுமக்களுக்கான முகாம் ஒன்றின் மீது தொடர் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முகாம் ஏன் குறிவைக்கப்பட்டது அல்லது இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இருப்பினும், கடந்த மாதம் வடக்கு டைக்ரே Tigray பிராந்தியத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர் கூட்டணிக்கும் அடிஸ் அபாபாவில் Addis Ababa உள்ள அரசாங்கத்திற்கும் இடையே தீவிரமடைந்த மோதல்கள் தற்போது சற்று ஓய்ந்திருந்தாலும், அப்பகுதியில் இன்னும் மோதல்கள் நீடிக்கின்றன என்பதை இந்தத் தாக்குதல் உணர்த்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *