கவிதைகள்

“வள்ளுவம் படிப்போம் வாழ்வும் சிறக்கும்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் 
     மெல்பேண்    ….. அவுஸ்திரேலியா 

வாழ்வியல் பகரும் வள்ளுவர் குறளோ
வாமன வடிவம் தாங்கியே இருக்கு
வாமன வடிவம் மனமெலாம் நிறைய
வள்ளுவம் உலகில் மலர்ந்துமே இருக்கு
 
தெள்ளு தமிழில் தெளிவாய் சொன்னார்
உள்ளம் சிறக்க ஒவ்வொன்றாய் சொன்னார்
சமயம் கடந்த தத்துவம் சொன்னார்
தமிழர் வள்ளுவர் என்பதே பெருமை
 
குறளைப் படித்தால் குறைகள் அகலும்
குறளைப் படித்தால் குணங்கள் சிறக்கும்
குறளை படித்தால் குழப்பம் அகலும்
குறளைப் படிப்போம் வாழ்வு சிறக்கும்
 
தேடித் தேடிக் கற்பவை அனைத்தும்
திரட்டித் தருவது திருக் குறளாகும்
வாடி நிற்கும் மனத்தில் உரத்தை
வளர்க்க வருவது திருக் குறளாகும்
 
அம்மா வருவார் அப்பா வருவார்
ஆசான் வருவார் அருளாளர் வருவார்
அரசர் வருவார் அமைச்சர் வருவார்
எல்லோர் இருப்பும் குறளில் இருக்கும்
 
வள்ளுவம் சொல்லா தத்துவம் இல்லை 
வள்ளுவம் என்பதே வாழ்வியல் ஆகும்
வள்ளுவம் படிப்போம் வாழ்வும் சிறக்கும்
வையத்துள் அனைவரும் வளமுடன் வாழலாம்  !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *