உலகம்
போதைமருந்து கொடுத்து ஒரு தசாப்தமாக பாலியல் துஷ்பிரயோகம் – 04 பிரித்தானியர்களிடம் விசாரணை

போதைப் மருந்து கொடுக்கப்பட்டு பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பிரித்தானிய பிரஜைகளிடமும் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
50 வயதான பிலிப் யங் என்பவர் தனது மனைவியை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவருடன் மேலும் மூன்று ஆண்களும் சேர்ந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே பிலிப் யங் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.
பிலிப் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். ஏனைய மூன்று பேரும் குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![]()