கவிதைகள்
புதிராய் என்னை வியப்பில் ஆழ்த்தியது!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

புலிக்குட்டி ஒன்று அடிபட்டுக் கிடந்தது
வளர்த்தோரில் பலர் விட்டுச் சென்றனர்
அவ்வேளையில் நான் சென்றிருந்தேன்
பண்பால் நான் பாதுகாத்து வளர்த்தேன்
குணமடைந்ததும் குணமாகவே இருந்தது
அங்கும் இங்கும் நன்றாக ஓடித் திரிந்தது
பிறரை துன்புறுத்தாது பழக்கியிருந்தேன்
நன்றாக வளர்ந்ததும் இயல்பை காட்டியது
விட்டுச் சென்றவர்கள் ஆட்டி வைத்தார்கள்
இடையில் வந்து உரிமை கொண்டாடினர்
புதிதாய் வந்தும் சொந்தம் கொண்டாடினர்
புலிபசித்தாலும் புல்லைத் தின்னாதல்லவா
அதனால் அதற்கு நன்றி தெரியாது போனது
பாதுகாத்தவனை சிலர் சீண்டிப் பார்த்தாலும்
சிறிதும் சிந்தையின்றி சிவனே என்றிருந்தது
இரக்கத்தால் பாதுகாத்தது என் பண்பாகும்
எதையும் எதிர்பார்த்து நான் செய்யாததினால்
இதையெல்லாம் சிந்தையில் பதிக்கவில்லை
இப்படியும் இவ்வுலகில் நிகழுமா என்பதுதான்
புரியா புதிராய் என்னை வியப்பில் ஆழ்த்தியது

![]()