இலங்கை

சர்வ மத சாம்பாராக்க வேண்டாம்; அநுராதபுரத்தில் ஏனைய மதங்களுக்கு இடமில்லை;  பௌத்தர்களின் இதயமது ; அரசு கைவைக்கக் கூடாது

பௌத்தர்களின் புனித பூமியான அநுராதபுரத்தில் சகல மதங்களையும் உள்ளடக்கிய வணக்கஸ்தலங்களை நிர்மாணித்து பௌத்த மதத்தின் இதயத்தை சர்வ மத சாம்பாராக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. பௌத்த விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இந்த அரசாங்கம் பௌத்தர்களின் இதயத்தில் கை வைக்குமாக இருந்தால் அது அரசாங்கத்திற்கு பூமரங்காகவே வந்து முடியும் என்ற எச்சரிக்கையை நாங்கள் விடுக்கின்றோம் என்று பிவித்று ஹெல உறுமய கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அநுராரபுரம் புனித பூமி அபிவிருத்தி யின் போது அங்குள்ள இரண்டு இந்து ஆலயங்களை புணரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதா? என்ற சந்தேகங்கள் எழுவதாகவும், இது தொடர்பில் அட்ட மாஸ்தானங்களின் மகாநாயக்க தேரர்கள் வெளியிடுவதுடன், இவ்வாறு நடந்தால் சிங்கள பௌத்தர்களுக்கு இது பிரச்சினை யாகும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாரா ளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று முன்தினம் தெரிவித்திருந்த நிலை யில். அவரை தொடர்ந்து நேற்று திங்கட் கிழமை ஊடக சந்திப்பை நடத்திய உதய கம்மன்பிலவும் அவ்வாறான கருத்தை
வெளியிட்டுள்ளார்.

உதய கம்மன்பில செய்தியாளர் சந்திப் பில் இது தொடர்பில் மேலும் தெரிவித் துள்ளதாவது,

தற்போதைய அரசாங்கம் பௌத்த விரோத வேலைத்திட்டங்களையே முன் னெடுக்கின்றது. இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் மகாநாயக்க தேரர்களால் கைகளில் கட்டப்பட்ட பிரித் நூலை அகற் றினர். அதன்பின்னர் பாராளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது ஐய மங்கல கீதம் நிறுத்தப்பட்டது. 22ஆவது திருத்தம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதத்தை கணக்கில் எடுக்க வில்லை. பௌத்தர்கள் வடக்கிற்கு இன வாத செயற்பாடுகளுக்கே செல்கின்றனர் என்றார். திருகோணமலையில் பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன். பிக்கு கள் கைது செய்யப்பட்டனர். பிக்குகளின் காவி உடை அகற்றப்பட்டது. பல்வேறு குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி பொது
மன்னிப்பு வழங்கிய போதும் ஞானச ர தேரருக்கு விடுதலை வழங்கப்படாது என்று ஜனாதிபதி கூறியுள்ளார். இதனால் இந்த அரசாங்கம் போர்த்துக்கேயர், ஒல் லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்கூட செய்யாத அளவுக்கு பௌத்த விரோத செயற்பாடுக ளில் ஈடுபடுகின்றது.

அநுராதபுரம் என்பது உலகவாழ் பௌத் தர்களின் இதயமாகும். 1500 வருடங்களாக தொடர்ச்சியாக தலைநகரமாக இருந்த அநுராதபுரம் போன்ற நகரம் உலகில் எங் கேயும் இல்லை. இவ்வாறான அநுராதபுர நகரத்தை பௌத்தர்கள் இருக்கும் அரசாங் கத்தினால் மட்டுமே அபிவிருத்தி செய்ய முடியும். பௌத்த எதிர்ப்பு கொள்கையில் இருக்கும் அரசாங்கம் அநுராதபுரத்தில் கை வைப்பது என்பது பௌத்தத்தின் அழிவுக் கானது என்றே கூற வேண்டும். இவ்வா றான அரசாங்கத்தினால் பௌத்தர்களின் இதயத்தில் கைவைப்பதற்கு இந்நாட்டு பௌத்தர்கள் இடமளிக்க மாட்டார்கள் என்பதனை கூறிக்கொள்கின்றோம்.

இதேவேளை புனித பூமி அபிவிருத்தி யின் போது நிலக்கீழ் நிர்மாணங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத னால் தூபிகளின் அடித்தளங்கள் பலவீன மடையும். இதனால் தூபிகளை அழிக்க இவர்கள் திட்டமிடு கின்றனரா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

அத்துடன் மேலும் வணக்கஸ்தலங்களை உள்ளடக்கி புனித பூமியை விருத்திச் செய் யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் வணக்கஸ்தலம் என்ற வசனத்திற்கு முன் னால் பௌத்த வணக்கஸ்தலம் என்றோ புரதான வணக்கஸ்தளம் என்றோ குறிப்பி டப்படவில்லை. அப்படியென்றால் சகல மதங்களின் வணக்கஸ்தலங்களையும் அநுராதபுரம் புனித பூமியில் நிர்மாணித்து, பௌத்த மதத்தின் இதயத்தை சர்வ மத சம் பார் போன்று மாற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிப்பதாகவே இதன்
மூலம் தெரிகின்றது.

ஏற்கனவே சிவன் கோயிலொன்று அநு ராதபுரம் புனித பூமியில் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. அதன்படி அரசாங்கத்தின் திட்டத்தின்படி இராமர் கோயில் மற்றும் சீதையம்மன் கோயிலை நிர்மாணிக்கும் நோக்கத்தில் அது தொடர்பான சரத்துக் களை புனித பூமி அபிவிருத்தி வர்த்தமா னியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சந்தே கங்கள் எழுகின்றன.

எதிர்காலத்தில் உருவாகும் பௌத்தர் கள் இருக்கும், பௌத்த சாசனத்தை பாது காப்பது தமது கடமை என்று எண்ணும் அரசாங்கத்தினால் அநுராதபுரம் புனித பூமியின் அபிவிருத்தி பணிகளை பொறுப் பேற்கும். ஆனால் பௌத்த விரோத திசைக் காட்டி அரசாங்கத்திற்கு அநுராதபுரம் புனித பூமியெனும் பௌத்தர்களின் இதயத் தில் கை வைத்தால் இந்த அரசாங்கத்திற்கு பூமரங்காகவே வந்து முடியும் என்ற எச்சரிக் கையை நாங்கள் விடுக்கின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *