இலங்கை

நாதக கார்த்திகா உட்பட 9 பேர் கோவை சிறையில் இருந்து விடுவிப்பு

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா உட்பட 9 பேர் இன்று (23) காலை கோவை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது தவெக வேட்​பாளர் சத்​ய​பா​மாவை ஆதரித்​து முதல்​வர் விஜய், அக்.4-ம் திகதி வாகன பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார்.

அப்போது வீராச்சிமங்​கலம் என்ற பகு​தி​யில் முதல்​வர் செல்​வதற்கு சற்று நேரத்​துக்கு முன்​பாக, நாம் தமிழர் கட்​சி​யின் வேட்​பாளர் கார்த்​திகா தொண்​டர்​களுடன் வாகன பேரணி​யாக வந்தார். முதல்​வர் வருகைக்​காக அங்கு நின்​றிருந்த பொலிஸார் பாது​காப்பு கருதி அவர்​களை மாற்று வழி​யில் செல்​லு​மாறு அறி​வுறுத்​தினர்.

அப்​போது நாதக​வினர்பொலி​ஸாருடன் வாக்​கு​வாதத்​தில் ஈடுபட்டனர். அதற்​குள் முதல்​வரின் வாக​னம் அவ்​வழி​யாக வரத்​தொடங்​கியது. இந்நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், தேர்தல் பரப்புரையின் போது பேனர் அகற்றப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தை கார்த்திகா தலைமையில் நாதகவினர் முற்றுகையிட்டனர்.

இது தொடர்பாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 20-ம் திகதி அன்று கோவையில் உள்ள இல்லத்தில் கார்த்திகாவை பொலிஸார் கைது செய்தனர். அதிகாலை நேரத்தில் அவரை கைது செய்த பொலிஸார், இரவு உடையில் விசாரணைக்கு அழைத்து சென்றது குறித்து விமர்சனம் எழுந்தது. அவர் உட்பட நாதக-வின் 12 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர்.

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கார்த்திகாவின் கைதுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த சூழலில் கைது செய்யப்பட்ட நாதக-வினர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர் பொலிஸார். இதன் பின்னர் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், 12 பேரும் பிணைக் கோரி தாராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதில், கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட 9 பேருக்கு பிணை வழங்கி நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று காலை கோவை மத்திய சிறையில் இருந்து பிணை பெற்ற கார்த்திகா உட்பட 9 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு நாதக உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *