இலங்கை

திலீபனின் சிலையை வைத்து உரையாற்றிய சிறீதரன்,கஜேந்திரகுமாருக்கு எதிராக வழக்குத் தொடருங்கள்

திலீபனின் சிலையை வைத்து உரையாற்றிய மற்றும் தமிழீழம் வேண்டும் என்று கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்படாமல் இருப்பது ஏன் என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழான பிரேரணை மற்றும் குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பி கூறினார்.

இதன்போது அர்ச்சுனா எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சியினரை பார்த்து இந்த அரசாங்கம் திருடர்கள் என்று கூறுகின்றது. ஆனால் யார் திருடர்கள் என்பதனை உறுதியாக கூறுங்கள். உலகில் முதன்முறையாக எதிர்க்கட்சிக்கு எதிராக மக்களை பேரணியாக அழைத்துச் சென்ற அரசாங்கம் இதுவே. நாங்கள் சத்தமின்றி இருக்கும் போது எங்களுக்கு எதிராக பேரணி போகின்றனர்.

இதேவேளை திலீபனின் சிலையை வைத்த கட்சியினரை கைது செய்யாமல் அப்பாவி 14 பேருக்கு எதிராக வழக்கு தொடர்ப்பட்டுள்ளமை தொடர்பில் நான் 27/2இன் கீழ் கேள்வியெழுப்பியுள்ளேன். இதில் பெயர்களை குறிப்பிட முடியாது என்று செயலாளர் குழு தெரிவித்துள்ளது. ஆனால் என்னை பேசாமல் இருக்குமாறு கூறினாலும் மக்கள் எப்போதாவது எழும்புவர்.

எவ்வாறாயினும் திலீபனின் சிலையை வைத்த எம்.பி மற்றும் அங்கு பேசியவர்களுக்கு வழக்குகள் எதுவுமில்லை. அதாவது சிறீதரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் அங்கு பேசியுள்ளனர். அவர்கள் தமிழீழம் வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு எதிராக எவ்வித வழக்குகளும் இல்லை. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கின்றது. ஏன் அந்த எம்.பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது என்று கேட்கின்றேன் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *