கதைகள்

அண்டங்காக்கையும் ஊர்க்குருவியும் 09… சோலையூர் குருபரன்

சோலையூர் குருபரன்
சோலையூர் குருபரன்

விட்டுக் கொடுத்துத்தான் போகலாமே

மட்டக்களப்பின் தென்பாலுள்ள கரையோரக் கிராமமொன்றில் ஒதுக்குப் புறமான பாழடைந்த வீட்டின் பின்னாலுள்ள மாமரnhன்றில் கூடு கட்டி தனது இரு குஞசுகளோடு சந்தோசமாக வாழ்ந்து வருகிறது அண்டங்காக்கை.
காலை ஏழு மணி இருக்கும். வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலமாதலால் வானத்தில் இருள் மேகம் சூழ்ந்திருந்தது. இடையிடையே மழையும் பெய்த கொண்டிருந்தது. அன்று ஞாயிறு விடுமுறை நாளாகவும் இருந்ததனால் பெரும்பாலானோர் வீடுகளிலேயெ இருந்தனர்.

குமார் அரச தொழில் புரியும் சுறுசுறுப்பான உழைப்பாளி. ஊரில் மரக்கறி, வெற்றிலைத் தோட்டமும் வைத்திருக்கிறான். திருமணம் செய்து ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை; இருக்கிறது. மனைவி சுந்தரியும் அரச காரியாலயமொன்றில் பணி புரிகிறாள். குமாரின் வீடு கிராமத்தின் மத்தியில் குறுக்குத் தெரு ஓரமாக அமைந்துள்ள கல்வீடு. நடுத்தரமானது. குமாரும் சுந்தரியும் காதலித்துத் திருமணம் செய்தவர்கள். வீட்டுச் சூழலும் அழகாகத்தான் இருக்கிறது. கடந்த இரு வருடங்களாக வீட்டில்தான் அமைதியில்லை. குமார் நல்லவந்தான். ஊரிலும் நல்ல பேருண்டு. சிலவேளைகளில் முரட்டுக் கோபமும் தலையெடுக்கும்.

கட்டுப்படுத்தக்குடிய கோபம். சுந்தரி துன்ப துயரம், கஷ்ட நஷ்டம் தெரியாமல் வீட்டில் செல்லப் பிள்ளையாக வளர்ந்தவள். முன்கோபம், அதிக ஆடம்பரம், விடாப்பிடியாகவும் குடும்பப் பொறுப்புத் தெரியாமலும் வளர்ந்தவள். கணவன், பிளளைமீது அளவுகடந்த பாசமும் கொண்டவள். அதனாலோ என்மோ நல்லாத்தான் போயக்கொண்டிருந்த வாழ்கையில் கண்ணூறு பட்டால்பொல் கணவன் மனைவியரிடையே அடிக்கடி முரண்பாடுகள் தோன்றசிச் சிறிய சலசலப்புக்களும் உருவாகுகினறன.; விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வின்மையால் ஒருசல நாட்கள் இருவரும் பேசாமலும் இருப்பர்.

அண்டங்காக்கை குஞ்சுகளுக்கு உணவு எடுப்பதற்காகக் கூட்டிலிருந்து பறந்து வந்து குமாரின் வீட்டு முற்றத்தில் இருந்த தண்ணீர் டப்பின் கீழெ சிந்திக் கிடந்த உணவுப் பருக்கைகளைப் பொறுக்ககுவதற்காக அருகில் இருந்த மாமரக் கிளையில் அமர்ந்து கொண்டது. அவ்வேளையில் காலை ஐந்து மணிக்கு எழுந்து தோட்டத்துக்குள் சென்ற குமார் கூலியாட்களை வேலை செய்யுமாறு கூறிவிட்டு காலை உணவும் தேநீரும் எடுப்பதற்காக வீட்டுக்கு வரும் வழியில் அருகில் இருந்த கடையில் பாணும் வாழைப்பழமும் வாங்கினான். பின்னர் தேநீர் எடுப்பதற்காக வீட்டுக்கு வருகிறான். முன் கேற்றைத் திறத்து கொண்டு குமார் வேகமாக வருவதை அதானித்து அண்டங்காக்கை வீட்டில் நடப்பதை கூர்ந்து கவனிக்க ஆயத்தமானது.
“சுந்தரி, சுந்தரி தேயிலை போட்டிருக்கா? நேரம் கோகுது. அத எடுத்துத்து வா” என்றவன் உள்ளே சென்று பார்க்கிறான்.

ஏழு மணியாகியும் சுந்தரியும் பிள்ளையும் நித்திரை விடடு எழுந்திருக்காததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான்;. “சுந்தரி… தோட்டத்துக்குப் போகக்குள்ள ஏழு மணிக்குத் திரும்பி வருவன் தேயிலை போட்டு வை எண்டு சொல்லித்துத்தானே போனேன். இன்னும் எழும்பாமப் தூங்கிறியே. இப்ப நான் என்னத்தக் கொண்டு போக. இப்படித் தூங்கிப் புள்ளையையும் பழுதாக்கிப் போடுவா போலக் கிடக்கு. எழும்பு உடனே போட்டுத் தா. நேரமாகுது. போகணும்.” என்று குமார் கூறியதும் ”சும்மா விடுங்க. நிம்மதியாத் தூங்கையும் விடுமாட்டிங்களா. எந்த நாளும் இதுதான் வேலையாக் கிறக்கு” என்று சுந்தரி கூறியதும் ” இதத்தானே தினமும் நீ செய்றாய். இண்டைக்காவது நேரத்தோட எழும்பிக் காலச் சாப்பாடச் சமைபமெண்டில்லாமதானே. இப்பிடித் தூங்கிறியே. மத்தவங்க என்னத்தச் சொல்லுவான்” எண்டதும் ”அவங்க எதையாவது சொல்லட்டும்.” என்று கூறிக் கொண்டு படுக்கையில் இருந்த துணியெல்லாம் அள்ளி வீசிவிட்டுக் குசினிக்குள் சென்றாள்.

குசினிக்குள் புறபுறுது்தக் கொண்டு இருந்த பாத்திர பண்டங்களை எடுத்து வீசிக் கொண்டிருந்தாள். தடால் புடாலென சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. ”ஒவ்வொரு நாளும் இது மாதிரித்தானே இருக்கிறாய். நீ எல்லாம் திருந்த மாட்டியா. இது என்ன சனியனாய் இருக்குது. இங்க பார் சத்தம் போடாம தேநீர் போட்டுத் தாரெண்டா போட்டுத் தா . இல்லண்டா கடையில எடுத்துத்துப் போறன். சத்தம் போட்டு ஊரக் கூட்டாத என்றதும் ” நான் சனியனாஇ நான் சனியனா. என்னப்பாத்தா உனக்குச் சனியனாத் தெரியுதா? முன்பெல்லாம் தேனே மானே எண்டிருந்த ஒனக்கு இப்ப சனியனா” எனக் கூக்குரலிட ஆரம்பித்தாள் சுந்தரி. இன்னும் ‘இவடத்தில் நிண்டா நிலம மோசமாகும்’ எனக் கருதிய குமார் கொண்டு வந்த பாணில் ஒரு இறாத்தலையும் இரண்டு பழத்தையும் வைத்துவட்டு வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றான். போகும் போது மனதுக்குள் ‘இவள் இப்படித்தான் பின்னேரம் எல்லாம் சரியாகிவிடும். கொஞ்சம் விட்டு அமைதியாக இருந்துதான் மாற்ற வேண்டும்” என நினைத்தவாறே ஹொட்டலுக்குச் சென்றான்.
“பாவம் குமார் அண்ணா. என்னதான் செய்வான்.

இப்படியெல்லாம் இருக்கிறாங்களே. இதெல்லாம் தானாகத் திருந்தினாத்தான் உண்டு.“ என மனதுக்குள் நினைத்தவாறு அண்டங்காக்கை சிந்திக் கிடந்த சோற்றுப் பருக்கைகளைப் பொறுக்கிக் கொண்டு தனது கூடு நொக்கிப் பறந்து சென்றது. கூட்டிலிருந்த குஞ்சுகளுக்குத் தீனியைக் கொடுத்துவிட்டு அருகிலிருந்த வேப்ப மரக் கிளை ஒன்றில் சோகத்தோடு அமர்ந்து கொண்டது.
வடக்குத் திசை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிரந்த கிட்டுக்குருவி சோகமாகக் கிளையில் அமர்திருக்கும் அண்டங்காக்கைணைக் கண்டதும் தாளப் பறந்து வந்து அருகில் அமர்ந்து கொண்டது.

”அக்கா இ அக்கா என்னக்கா சோகத்தோடு இருக்கீங்க” எனக் கேட்டது. ”தம்பி குஞ்சுகளுக்கு உணவு எதாச்சும் கிடைக்குமா எனப் பார்க்கப் பக்கத்து வீடொன்றுக்குப் போயிருந்தேன். அந்தச் சம்பவத்தப் பாத்த விறகு ஏன்தான் இங்கு வந்தேன் என எண்ணத் தோன்றியது. இப்படியெல்லாம் நடந்து கொள்றாங்களே” என முழுக்கதையையும் சொல்லி முடித்தது அண்டங்காக்கை..

இதென்ன அக்கா! நாட்டுல இதப்போல எத்தன நடக்குது. சண்டைஇ அடிதடிஇ வெட்டுக் கொத்துஇ கொலைஇ டிவோர்ஸ் என்றெல்லாம் வாழ்கையச் சிதைச்சுக் கொண்டிருக்குதுகள். சின்னச் சின்னப் பிரச்சினை எல்லாம் ஊதிப் புதாகரமாக்கி விடுகுதுகளே. வீட்டுல நடக்கும் அரவாசி பிரச்சனகளுக்கு சிமார்ட போணும் தொலைக்காடசியில் ஒளிபரப்பப்படும் தமிழ் நெடுந்தொடர் நாடகங்களும் காரணமாக இருக்குதாம். குடும்பச் சண்டைஇ புள்ளயள் சொல்லுக் கேக்குதில்ல. விலைவாசி அதிகரிப்பு ஒருபக்கம், மூணு வேளயும் சத்தான சாப்பாடு சாப்பிடக் காசில்லாமை. கடன் தொல்லைஇ வருமானம் செலவுக்குப் போதாதாம், புள்ளயளும் அதஇ இத வாங்கித் தா அத வாங்கித் தா எண்ணுதுகள், பெண்கள் உடு துணி ஆடம்பரச் செலவெனப் பிரச்சினைகள் கூடிக்கெண்டே போகுது. போற போக்கப் பாத்தா களவுஇ கொள்ளைஇ மோசடி, தற்கொலை எண்டு பிரச்சன அதிகரிக்கும் போலக் கிடக்கு.. நாம் என்ன செய்யலாம். பகுத்தறிவுள்ள அதுகள்தான் திருந்த வேண்டும்.”

”அதுதான் தம்பி நானும் பல இடங்களில் பாத்திருக்கன். சின்னப் பிரச்சனயெல்லாம் ஊதிப் பெரிதாக்கி வாழ்க்கையத் தொலைக்குதுகளே. நாமெல்லாம் எவ்வனவு ஒத்துமையா இருக்கம் . இதுகளிட்ட அந்த ஒத்தும வருதில்லையே. பேசித் தீக்க வேண்டிய பிரச்சனய ஊதிப் பெரிதாக்குதுகளே. இதுகளெல்லாம் அந்த ஆண்டவந்தான் காப்பாத்தணும். முதலும் இப்படித்தான் பல வீடுகளில் ஏட்டிக்குப் போட்டியாக நடந்தன இப்போது அதிகரிச்சுக் கிடக்குது. ” எனக் காக்கை கூறியதும் ”அக்கா எனக்கும் நேரமாகுது. நானும் போக வேணும்” எனக் கூறிய சிட்டுக் குருவி அங்குமிங்கும் பாத்து தனது சிறிய சொண்டினால் இறகுகளை நீவி விட்டுச் சிறகடித்துப் பறந்த சென்றது.

அண்டங்காக்கை பெருமூச்சு விட்டு மனப்பாரம் குறைந்த நிம்மதியோடு சூழலை அவதானித்து, தன் நீண்ட சொண்டினால் இறகுகளை நீவி விட்டுக் கொண்டு சிறகடித்துப் பறந்து தன் கூட்டுக்குச் சென்றது. சிட்டுக் குருவியும் பறந்து வான் வெளியில் கலந்தவிட்டது.

களம் தொடரும்….

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *