இலங்கை

ரணில் – மகிந்த குடும்பத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்!; தண்டனைக்காகப் பல பிறவிகள்

நீங்கள் செய்த பாவங்களெல்லாம் போதும், மேலும் பாவம் செய்யாதீர்கள், தண்டனை அனுபவிக்க காலம் இல்லை என்று புத்தசாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டம் ஒன்றின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டில் இன்று சட்டம் சரிசமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டிருக்கின்றனர்.

செய்த பாவங்களுக்கு தண்டனை

இப்போதும் அவர்களிடம் நாம் கூற விரும்புவது ஒன்றுதான் நீங்கள் ஏற்கனவே செய்த பாவங்கள் போதும். புதிதாகப் பாவங்களைச் செய்ய நினைக்காதீர்கள்.

ஏனெனில், நீங்கள் செய்த பாவங்களுக்கான தண்டனைகளை நாம் வழங்கிக் கொண்டிருக்கின்றோம். அதனால், அவற்றுக்கான தண்டனைகளை அனுபவிக்க இன்னும் காலம் போதாது.

ரணில் - மகிந்த குடும்பத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்! தண்டனைக்காகப் பல பிறவிகள் | Bad Times For Ranil And The Rajapaksa Family

 

சில தண்டனைகளை அனுபவித்து முடிப்பதற்குப் பல பிறவிகளைக் கூட எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அந்த அளவுக்குப் பெரிய பாவங்களை அவர்கள் செய்திருக்கின்றார்கள்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது என்பது எமது மக்கள் ஆணையின் முக்கிய எதிர்பார்ப்புக்களில் ஒன்றாக இருந்தது. அந்தப் பணியை நாம் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றோம்.

ரணில் விக்ரமசிங்க சிறையில்  வைக்கப்படுவார் என்று யாரும் நம்பவில்லை.

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் விளக்கமறியலில் இருப்பாரக்ள் என்றும், முன்னாள் ஜனாதிபதியின் மனைவிகூட விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்றும் இந்த நாட்டில் யாரும் நம்பியிருக்கவில்லை.

நாம் எமக்குரிய பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். நீதித்துறை தனக்குரிய பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது.

அதேபோன்று, ஜனாதிபதியும் தனக்குரிய பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *