இலங்கை

ஞானசாரருக்கான போராட்டம் இரண்டாகப் பிரிந்தது பிக்குகளின் அணி!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பேரணியான வந்த பிக்குகள் அணி தமக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளால் இரண்டு அணிகளாக பிளவடைந்துள்ளன.

பேரணிக்கு தலைமை தாங்கிய பலங்கொட கஸ்சப தேரருக்கும் மற்றும் இன்னுமொரு பிரதான தேரருக்கும் இடையிலேயே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை பேரணி கொழும்பை வந்தடைந்த பின்னர், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடும் விடயத்தில் இரண்டு தேரர்களுக்கும் இடையில் கடும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, இருவரும் கடுமையாக வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஊடகங்களுக்கு முன்னிலையேலேயே இந்த வாக்குவாதங்கள் இடம்பெற்றதுடன், இதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பிக்குகள் பெளத்த மத விவகார அமைச்சுக்கு சென்ற போதும் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கொழும்பு விகாரமாதேவி பூங்கா பகுதியிலும் இரண்டு தேரர்களும் கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

கஸ்சப தேரர் இந்த விடயத்தை அரசியலாக்க முயற்சிப்பதாகவும் இதற்கு இடமளிக்க முடியாது என்றும் கூறியே மற்றைய தேரர் கூறியுள்ளார். இதனால் இந்த பேரணியில் வந்த தேரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிவடைந்துள்ளதுடன், கஸ்சப தேரர் தலைமையிலான குழு கொழும்பு விகாரமாதேவி பூங்கா பகுதியில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடிவு செய்து அங்கிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *