இலங்கை

திலீபன் சிலை அகற்றம்; அரசாங்கம் கூறுவது என்ன?

“புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகும், அவ்வமைப்பின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாது, நினைவு கூருவதற்கும் சட்டத்தில் இடமில்லை. எனவே, சட்டவிரோத நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் அது தொடர்பில் சட்டம் அமுலாகும்.”- என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலொன்றின்போது, திலீபனின் சிலை விவகாரம் சம்பந்தமாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு

“வடக்கில் முன்னைய காலப்பகுதி முதலே திலீபனுக்கு தொடர்ச்சியாக நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான படங்களையும் காண முடியும். இம்முறை உருவச்சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. அதனைதான் பொலிஸார் அகற்றியுள்ளனர்.

புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். எனவே, அந்த அமைப்பு அல்லது அந்த அமைப்பின் உறுப்பினர்கள் குறித்து பிரச்சாரம் செய்யும் வகையில் நிகழ்வுகளை நடத்துவதற்கு சட்டத்தின் பிரகாரம் அனுமதி இல்லை. தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும் முடியாது. இது தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சிலை அகற்றுவதற்கு முன்னர் அது பற்றி நீதிமன்றத்தக்கு கருத்து தெரிவிக்கப்பட்டது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் பரீசிலனை செய்யப்படுகின்றது.

நாட்டில் இன மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் நவம்பர் மாதம் வரும்போது வடக்கு, கிழக்கில் இப்படியான சம்பவங்களை செய்வதற்கு முற்படுகின்றனர். ஆனால் கடந்த இரு வருடங்களில் இன மற்றும் மத முரண்பாடுகளுக்கு நாம் இடமளிக்கவில்லை.

எனினும், ஏதேனும் பகுதியில் சட்டவிரோத நடவடிக்கை இடம்பெற்றால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க்படும்.” – என்றார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *