ரணிலை கதி கலங்க வைத்துள்ள நாமல் – சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்

ராஜபக்ச குடும்பத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் காரணமாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த நல்லாட்சி காலப்பகுதியில் ராஜபக்சர்களுக்கு எதிரான பல குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு மறைப்பட்டு வந்ததாகவும், அதற்கு உடந்தையாக ரணில் விக்ரமசிங்க செயற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், நாமல் ராஜபக்சவுக்கு சமகால அரசாங்கம் அச்சம் அடைந்துள்ளமையினால், அவரை சிறையில் அடைந்துள்ளதாக, ராஜபக்சர்களின் சட்டத்தரணி சாகர காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
எனினும், உண்மையில் பயந்திருப்பது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். Politics
ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவதாக கூறி 2015 ஆம் ஆண்டில் ரணில் – மைத்திரி அரசாங்கம், ஆட்சிக்கு வந்தது. எனினும் குறித்த அரசாங்கத்தில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினரின் நிதி மற்றும் ஏனைய குற்றங்களை மூடிமறைத்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, நாமல் ராஜபக்ச மீது சுமத்தப்பட்டிருந்த நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 2016ஆம் ஆண்டு ஜுலை மற்றும் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதங்களில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தற்போது நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 70 மில்லியன் ரூபா கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில், 2016 ஜூலை மாதம் நிதி மோசடிப் பிரிவினரால் நாமல் கைது செய்யப்பட்டார்.
எனினும் பின்னர், அந்த ஆவணங்கள் மூடிமறைக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பணமோசடிச் குற்றச்சாட்டுகளின் கீழ் ஹெலோ கோப் நிறுவனத்தின் ஊடாக 125 மில்லியன் ரூபா ஊழல் செய்தமை தொடர்பில் 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் நிதி மோசடிப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அந்த விசாரணைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
![]()