22 க்கு பின் துண்டுகளாகச் சிதறியுள்ள எதிர்க்கட்சி; அமைச்சர் நளிந்த தெரிவிப்பு

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னர் ஒரளவுக்கேனும் ஒற்றுமையாக இருந்த எதிர்க்கட்சி இப்போது துண்டு துண்டுகளாகியுள்ளது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கைகயிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
22ஆவது திருத்தத்திற்கு முன்னர் எதிர்க்கட்சிகளுக்கிடையே ஏதாவது ஒற்றுமை இருந்திருந்திருந்தாலும் அந்த எதிர்க்கட்சி பாக்கு குலையை நிலத்தில் அடித்ததை போன்று சிதறி போயுள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் பெரிய பிளவுகள் உள்ளன. அதில் இருந்து மீள்வதற்கே பாராளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது மற்றையவர்களை வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. மற்றைய குழுக்கள் தொடர்பில் வெளியாகும் தகவல்களுக்கமைய சீஐடி, எப்சீஐடி மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனால் 22ஆவது திருத்தத்திற்கு முன்னர் இருந்ததை விடவும் அந்த திருத்தத்திற்கு பின்னர் எதிர்க்கட்சி துண்டுகளாகியுள்ளது. சரியான அரசியல் தொனிப்பொருள் இல்லாத காரணத்தினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.
![]()