திலீபனின் சிலையை அகற்றிய விடயத்தில் அரசுக்கு தொடர்பில்லை என்றால் அதே இடத்தில் சிலையை வையுங்கள்

தியாக தீபம் திலீபனின் சிலையை அகற்றிய விடயத்திலே தங்களுக்கு எதுவும் பொறுப்பில்லை என்ற வகையிலே அரசாங்க அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கூறியிருக்கிறார். அப்படி என்றால் தயவுசெய்து அந்த சிலையை திருப்பிக் கொண்டுவந்து வைக்கச் சொல்லுங்கள், பிரச்சனை முடிந்தது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபனின் சிலை விவகாரத்தில் பொலிஸார் நடந்துகொண்ட விடயம், அதாவது சிலையை அகற்றிய விடயத்திலே தங்களுக்கு எதுவும் பொறுப்பில்லை என்ற வகையிலே அரசாங்க அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.
அப்படி என்றால் பொலிஸார் அரசாங்கத்தினுடைய, அதற்குத் தாங்கள் பொறுப்பில்லை என்றால் ஏற்கனவே அவர்கள் சிலை வைக்கலாம் என்று சொன்ன கருத்தின் அடிப்படையிலே பார்த்தால், அரசாங்கத்திற்கு அதிலே தொடர்பு இல்லை என்றால் தயவுசெய்து எடுத்த சிலையை திருப்பிக் கொண்டுவந்து வைக்கச் சொல்லுங்கள், பிரச்சனை முடிந்தது.
அவர் தலைவருக்கு வெண்கல சிலை வைக்கப்போகிறோம் என்று சொல்கிறார் என்றால் அதையும் வையுங்கோ. நாங்க அதுக்கு மாறில்லை, அதை வரவேற்கிறோம். மாநகரசபையும் அதை எதிர்க்காது.
அமைச்சர் அங்கீகரித்துவிட்டால் சட்டப்படி கொடுக்கலாம். நீங்கள் ஓம் என்றால் மாநகரசபையும் அதற்கான விண்ணப்பத்தை உங்களுக்கு தரும். சட்டப்படி அங்கீகாரத்தைக் கொடுங்கள், இந்த சிலையும் வைக்கலாம், அந்த சிலையும் வைக்கலாம்.
தயவுசெய்து அந்த அங்கீகாரத்தை அமைச்சர் அல்லது அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். நிச்சயமாக எந்த அமைச்சரோ, அரசாங்கமோ பொலிஸார் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள்ளே இல்லை, அவர்கள் செய்கிறார்கள், நாங்கள் பொறுப்பில்லை என்று கை கழுவி விட முடியாது. ஆதலினால் நீங்கள் ஏற்கனவே தேர்தல் காலத்தில் சொன்னது போல வல்வெட்டித்துறையிலே தேசியத் தலைவருடைய தாயாருடைய சிலையை வைப்பதற்கு அனுமதியுங்கள் என்று நான் திருப்பி கேட்கின்றேன். அதேபோல அவர்கள் இப்போது ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள், நாங்களும் அந்த கோரிக்கைக்கு உடன்பாடு. தேசியத் தலைவருடைய வெண்கல சிலையை வைப்பதற்கு அங்கீகாரத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.
![]()