இலங்கை

மட்டக்களப்பு பட்டிப்பளையில் பாரிய சிங்களக் குடியேற்றமா? ; 1500 ஏக்கர் காணியை வழங்கும் வனவளத்துறை

மட்டக்களப்பு மாவட்டத்தில் வன வளத்துறை திணைக்களம் செயற்படும் முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது. பட்டிப்பளை பிரதேசத்தில் வனவளத்துறை திணைக்களத்துக்கு சொந்தமான 1500 ஏக்கர் காணியை பெரும்பான்மையினத்தவர்கள் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றியுள்ளனர்.தற்போது 1500 ஏக்கர் காணியை விடுவித்து அவற்றை அந்த சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கே வழங்க பட்டிப் பளை பிரதேச செயலகத்துக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் கேள்விகளை முன்வைத்தே இவ் இவ வாறு தெரிவித்த அவர்மேலும் பேசுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தீர்க் கப்படாத பிரச்சினையாகவே உள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை அமைச்சுக்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பங்குப்பற்றுடலுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை விடுவிப் பதற்கு வளவனத்துறை திணைக்களம் தயாரா கவில்லை என்பது தெளிவாக வெளிப்படுத் செயற்படுத்தாத அரச அதிகாரிகள் உள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விராணைக் கல் விவசாய நிலம் தொடர்பில் ஏறாவூர் பற்று பிரதேச சபை அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது எமது கட்சி எம்.பி. சிறிநேசன் பல விடயங்களை முன்வைத் துள்ளார். பண்ணையாளர்களும் இந்த காணி தொடர்பில் தமது நிலைப்பாட்டையும் முன் வைத்துள்ளார்கள்.ஆனால் இந்த நிலப்பகு தியை வனவளத்துறை திணைக்களத்துக்கு வழங்கும் வகையில் வர்த்தமானி பத்திரம் ஊடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தற்போது பதிலளித்துள்ளார்.

மட்டு எல்லையில் அத்துமீறிய சிங்கள குடியேற்றம்! - Senpakam.org

மட்டக்களப்பு மாவட்டத்தில் வன வளத் துறை திணைக்களம் செயற்படும் முறை மையை ஏற்றுக்கொள்ள முடியாது.பட் டிப்பனை பிரதேசத்தில் 700 ஹெக்டயர் காணியை விடுவிக்கவுள்ளதாக தற்போது குறிப்பிடப்படுகிறது. இந்த பகுதியில் வன வன வளத்துறை திணைக்களத்துக்கு சொந்தமான 1500 ஏக்கர் காணியை பெரும்பான்மையி னத்தவர்கள் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றியுள்ளனர்.தற் போது 1500 ஏக்கர் காணியை விடுவித்து அவற்றை அந்த சட்ட விரோத குடியிருப்பாளர்களுக்கே வழங்க பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணி யில் மேய்ச்சல் தரைக்குரிய காணிகளை என் விடுவிக்க முடியாது?

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் அன்றாட தேவைகளுக்கும், பயன்பாட்டுக்கும் காணிகளை விடுவிப்பதில் வளவளத்துறை திணைக்களம் தொடர்ச்சியாகவேதடைகனை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வவுனியாமாவட் டத்தில் கிவுல் ஓயா திட்டத்துக்கு வனவளத் துறை திணைக்களத்துக்கு சொந்தமான 12 ஆயி ரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு தீர்மா னிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் வனவளத்துறை மக்களின் பயன்பாட்டுக்கான காணிகளை விடுவிக்கும் போது ஏன் மட்டக் களப்பு மாவட்டத்தில் மாத்திரம் காணிகளை விடுவிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. வனவளத்துறை திணைக்களத்தின் செயற்பாடு கள் முற்றிலும் பாரபட்சமானது.

திவுலான பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்ச ல் நடவடிக்கைகளுக்கு கொண்டு செல்லுமாறு அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறிப்பிடப்ப டுகிறது.ஆனால் அங்கு சென்றால் வன வளத் துறை திணைக்களம் பண்ணையாளர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படுகிறது. யானை கட்டுப்பாட்டு அலகு ஒன்று அமைக்கப்படுவ தாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் இந்த திட் டத்துக்குள் போரைத்தீவுபற்று மற்றும் கிரான் ஆகிய பகுதிகள் உள்வாங்கப்படவில்லை. தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுகிறது. வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு மோட் டார் சைக்கிள்கள் வழங்குவதிலும் பாரபட்சம் காண்பிக்கப்படுகிறது.

எனவேமட்டக்களப்பு மாவட்டத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ், வனங் களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள, வன ஒதுக்கங்களாகப் பிரகடனப்படுத்துவ தற்கு உத்தேசித்துள்ள, வன ஒதுக்கங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கு முன்மொழியப் பட்ட பிரதேச செயலாளர் அலுவலகங்கள் எத்தனை?

பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு விடுவிப்பதற்கு உத்தேசித்துள்ள, இதுவரை யில் பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள, காணிகளின் அளவு, அவை அமைந்துள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள், கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் கிராமங்கள் என்பன யாவை?
மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வீரானைக்கல் விவசாய அமைப்பிற்குச் சொந்தமான கமார் 560 ஏக்கர் காணியை, வன ஒதுக்கமாகப் பிரகடனப்படுத்துவதற்கு வனப் பாதுகாப்புத் திணைக்களம் முன்மொ ழிந்துள்ளதா?

காணி 1979ஆம் ஆண்டு முதல் பயிர்ச் செய் கைக்காகப் பயன்படுத்தப்பட்டு, 1983 ஆம் ஆண்டு முதல் அதற்காக வருடாந்த காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதா? 2008/04ஆம் இலக்க கற்றுநிருபத்தின் ஏற்பா டுகளுக்கமைவாக, மேற்படி காணியை விவ சாயிகளுக்கு மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

கிழக்கு மாகாணத்தில் வனவளத்துறை திணைக்களத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் இலங்கைத் தமிழர சுக்கட்சியின் எம்.பி. குகதாசன், அண்மையில் பிரதமரிடம் முன்வைத்த கேள்விகளுக்கு ஒரு மாதக்காலத்துக்குள் பதிலளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுவரையில் பதில் கிடைக்கவில்லை. அந்த கேள்விகளுக்கு விரைவாக பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கி றோம்.என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *