பலதும் பத்தும்

அமெரிக்காவில் மூன்று கோல்ஃப் பந்துகளை விழுங்கிய பாம்பு 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் மூன்று கோல்ஃப் பந்துகளை விழுங்கிய பாம்பு ஒன்று கால்நடை மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்தப் பந்துகள் அறுவை சிகிச்சையின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. கடந்த 22ஆம் திகதி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குறித்த பாம்பின் உடலில் மூன்று கோல்ஃப் பந்துகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் பந்துகளை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை கால்நடை மருத்துவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

பாம்புக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்ட பின்னர், மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் அதன் உடலில் இருந்த மூன்று கோல்ஃப் பந்துகளையும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே எடுத்துள்ளனர்.

இதனால் பாம்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தங்களுக்கு நிச்சயமாக மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதனிடையே, பாம்பு கோல்ஃப் பந்துகளை முட்டைகள் என தவறாக நினைத்து விழுங்கியிருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த வினோத சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் பகிரப்பட்டுள்ள நிலையில், அது அதிகளவான பார்வைகளைப் பெற்று வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *