இலங்கை

22 க்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்பு ஆடையில் ஐ.ம.ச.எம்.பி.க்கள்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை கறுப்பு ஆடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதி நாள் விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கறுப்பு ஆடையில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிதேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இவ்வாறு கறுப்பு உடை அணிந்திருந்தனர்.

இதேவேளை புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்வும் இவ்வாறு கறுப்பு உடை அணிந்திருந்தார்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தியுடனான கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சி உறுப்பினர்கள் வழமையான உடையிலேயே பாராளுமன்றம் வந்திருந்தனர்.

அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சியினரும் வழமையான உடையிலேயே பபராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்கது என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *