இலங்கை

அனோஜனின் விடுதலை குறித்து ACJU பொதுச் செயலாளரைச் சந்தித்தார் சாணக்கியன்

சிவராசா அனோஜனின் விடுதலையை உறுதி செய்வதற்கு அகில இலங்கை ஜமீய்யத்துல் உலமா (ACJU) சபையின் பொதுச்செயலாளர் அஷ்-ஷேக் அர்கம் நூராமித் முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் 96வது தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த விசேட வரவேற்பு நிகழ்வின் போது அகில இலங்கை ஜமீய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளரைச் சந்தித்துப் கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் பதில் தூதுவர் யாசர் அப்துல் ரஹ்மான் அல்-ஹஸ்மி விடுத்த அழைப்பையேற்று இந்நிகழ்வில் அவர் கலந்து கொண்டார்.

அனோஜன் சிவராசாவின் விடுதலைக்காக சாத்தியமான அனைத்து முயற்சிகள் மூலமும் ஆதரவைத் திரட்டுவது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் எனக் சுட்டிக்காட்டிய சாணக்கியன், இந்த விவகாரத்தில் கிடைக்கும் ஒவ்வொரு சிறிய ஆதரவும் மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *