பலதும் பத்தும்

குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவத் தீர்வு

இங்கிலாந்தில் குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, ஆயுளை நீடிக்கும் மருந்து தேசிய சுகாதார சேவை மூலம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களுக்கும் மருந்து தயாரிப்பாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற வெற்றிகரமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, HER2-குறைவான முற்றிய மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, ஆண்டுக்கு சுமார் ஆயிரம் பெண்கள் இன்று இந்த மருந்தைப் பெற முடியும் என தேசிய சுகாதார சேவை குறிப்பிட்டுள்ளது .

இங்கிலாந்தில் வருடாந்தம் கண்டறியப்படும் 60 ஆயிரம் புதிய மார்பகப் புற்றுநோய் பாதிப்புகளில், ஏழில் ஒருவருக்கு HER2 மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதாகவும் தேசிய சுகாதார சேவை சுட்டிக்காட்டியுள்ளது .

மருத்துவப் பரிசோதனைகள், சாதாரண கீமோதெரபியுடன் ஒப்பிடும்போது, ​​என்ஹெர்டு ( Enhertu) மருந்து, நோய் முன்னேற்றமில்லா சராசரி உயிர்வாழும் காலத்தை 5.1 மாதங்களிலிருந்து 9.9 மாதங்களாக, அதாவது கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தியுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *