இந்தியாவின் சதி வலைக்குள் இலங்கை சிக்கிவிடக் கூடாது!; இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் வருகையால் ஆபத்து

இலங்கை அரசாங்கம் இந்தியப் பிரதமருடன் 2025 ஏப்ரல் 5 ஆம் திகதி கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை எவ்வாறு தொடர்வது என்பது குறித்து விவாதிப்பதற்காகவே இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்தார் என மக்கள் போராட்ட இயக்கத்தைச் சேர்ந்த வசந்த முதலிகே,
நீர்கொழும்பில் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
இங்கு மேலும் தெரிவித்த வசந்த முதலிகே:
“இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் சமீபத்தில் மூன்று நாள் பயணமாக இலங்கை வந்திருந்தார். அந்தப் பயணத்தின்போது, இலங்கையுடன் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெ ழுத்திடப்பட்டன. கையெழுத்திடப்பட்ட அந்த மூன்று ஒப்பந்தங்கள் தொடர்பான எமது நிலைப்பாட்டை இன்று தெரிவிப்பதே எமது நோக்கம்.
2025 ஏப்ரல் 5 அன்று இந்தியப் பிரதமர் இலங்கை வந்தபோது, ஜனாதி பதி அனுர குமாரவும் இந்தியப் பிரதமர் மோடியும் ஏழு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இந்த ஏழு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்தபோதிலும், அந்த ஒப்பந்தங்கள் என்ன, அவற்றில் என்னென்ன அடங்கியிருந்தன. அவற்றின் தாக்கம் என்ன என்பனவற்றை இலங்கை மக்கள் இன்னும் அறியவில்லை.
மக்கள் போராட்ட இயக்கம் என்ற முறை யில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்
கீழ் கையெழுத்திடப்பட்ட ஏழு ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை எங்களுக்கு சுளுக்கு வழ வழங்குமாறு ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை விடுத் தோம். ஆனால், அப்படி ஏழு ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை என்று ஜனாதிபதி செயலகம் எங்களுக்கு எழுத்துமூலமாக அறிவித்தது.
அதனால் தான் எமக்கு சந்தேகம் எழுகின்ற து. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு செய்யப் பட்டதாகக் கூறப்படும் ஏழு ஒப்பந்தங்களும் இல்லை, அவற்றில் அடங்கியுள்ள உண்மை களும் இல்லை. ஆனால், அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட பிறகு திட்டமிட்ட காரியங்கள்தான் இப்போது நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன.
பின்னர், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்தபோது, இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளான அமைச்சர்கள் இலங்கைக்குப் பயனளிக்கும் மூன்று ஒப்பந் தங்களில் கையொப்பமிட்டுள்ளதாகத் தெரி வித்தனர்.
*இலங்கை பாதுகாப்புப் பல்கலைக்கழகத் திற்கும் இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூ ரிக்கும் இடையிலான *கல்விசார் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
*மாணவர் குழுக்கள் பரிமாற்றம் தொடர் பான உடன்படிக்கை.
இந்தியாவினால் நமக்கு இவவசமாக வழங் கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் செய விழக்கும் பட்சத்தில், அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பது தொடர்பான உடன்படிக்கை.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் 38 ஆண்டு களுக்குப் பிறகு இலங்கைக்கு வந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான மாணவர் பயிற்சி குறித்து பேசுவதற்காகவா அல்லது பழுதடைந்த விமான அமைப்புகளின் பராமரிப்பு குறித்து பேசுவதற்காகவா என்று நாங்கள் அரசாங்கத் திடம் கேட்க விரும்புகிறோம்.
இவையெல்லாம் பொய்கள். இந்தியப் பிரதமர் மோடியுடன் 2025 ஏப்ரல் 5 அன்று கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேலும் முன்னெடுத்
துச் செல்வதற்கும், இலங்கையின் கட லோரப் பகுதியையும் அதன் இறையாண் மையையும் இந்தி யாவுக்காக எவ்வாறு பயன்படுத்துவது என் பது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்துவ தற்குமே இந்தியப் பாதுகாப்பு அமைச் சர் இலங்கைக்கு வந்
தார். இந்தத் தகவல் இலங்கை ஊடகங்களுக்கு வழங்கப்படவும் இல்லை, வெளி உலகிற்கு வெளியிடப்படவும் இல்லை. ஆனால், இது குறித்து இந்திய ஊடகங்களில் விவாதங்களும் செய்திகளும் வெளிவந்துள்ளன. இலங்கையின் நிலப்பரப்பு இந்தியாவிற்கு எதிராக ஒருபொதும் பயன்படுத்தப்படாது என்று இலங்கை அ சாங்கம் இந்தியப் பிரதமருக்கு வாக்குறுதி அளித் துள்ளது. இலங்கை ஒரு அணிசேரா நாடாகவும், எந்தவொரு நாட்டிற்கும் சார்பாகச் செயல்ப டாத நாடாகவும் இருக்கும் பட்சத்தில், இந்தி யாவிற்கு எப்படி இத்தகைய வாக்குறுதியை அளிக்க முடியும் என்று நாங்கள் இலங்கை அரசாங்கத்தைக் கேட்கிறோம்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ் தான் மற்றும் ஈரான் போன்ற நாடுகள் தங்களை அதிகார முகாம்களாகப் பிரித்துக்கொண்டு தங் கள் அதிகாரத் தனத்தை விரிவுபடுத்த முயற்சி க்கும் இந்தச் சூழலில், இலங்கை எப்படி இந் தியாவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்கச் செயல்பட முடியும்?
இந்தியா சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள் கிறோம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்தியாவிற்கு எதிராக எங்கள் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவது, நாம் இந்தியாவிடம் முற்றாகச் சரண டைவதையே உறுதிப்படுத்துகின்றது” என்று தெரிவித்தார்.
![]()