பலதும் பத்தும்

வவுனியாவில் 5 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்!

வவுனியா – வேப்பங்குளம் சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில், விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று 5 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஒரு பகுதியாக மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.

இதன்போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம், ஆலய வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.

மாம்பழத்தை பெற்றுக்கொள்வதற்காக இடம்பெற்ற பலத்த போட்டிக்கு மத்தியில், வவுனியாவைச் சேர்ந்த இ. மோகனதாஸ் குடும்பத்தினர் 505,000 ரூபா தொகையை வழங்கி மாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டனர்.

ஆலய வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் மாம்பழம் 5 இலட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டமை பக்தர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *