இலங்கை

மகிந்த தலைமையில் கூடும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் – அநுர அரசை வீழ்த்த மாபெரும் பேரணி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பேரணி இன்று(12.09.2026) அனுராதபுர மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

“அடக்குமுறை அரசாங்கத்தின் அதிகாரத்தை உடைப்பதற்கான ஒரு மாபெரும் போராட்டம்” என்ற கருப்பொருளின் கீழ் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த மாபெரும் பேரணி, முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் தலைமையில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

மகிந்த தலைமையில்..

இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் விளக்கமறியல் உத்தரவுக் காரணமாக, இந்த மாபெரும் பேரணி இன்று(12) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த தலைமையில் கூடும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் - அநுர அரசை வீழ்த்த மாபெரும் பேரணி | Sri Lanka Podujana Peramuna S Rally

 

எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பல தலைவர்கள் இந்த மாபெரும் பேரணியில் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில், இந்த மாபெரும் பேரணிக்காக அனுராதபுர மாநகர சபை மைதானத்தின் ஆயத்தப் பணிகள் நேற்று இரவு(11) முதல் இடம்பெற்று வருவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

News

மகிந்த தலைமையில் கூடும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் - அநுர அரசை வீழ்த்த மாபெரும் பேரணி | Sri Lanka Podujana Peramuna S Rally

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *