உலகம்

கியூபெக் மாகாணத்தில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்த இந்திய குடும்பம் இந்தியா திரும்பியது

கியூபெக் மாகாணத்தில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்த இந்திய குடும்பம் ஒன்று இந்தியா திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தனது உயிருக்கு ஆபத்து என்பதால் கனடாவில் புகலிடம் கோரினார் இந்தியர் ஒருவர். ஆனால், எட்டு ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்துவந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியா திரும்பும் நிலை அவரது குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில், அரசியல் உள்நோக்கம் காரணமாக பொலிசாரால் கைது செய்யப்பட்டு அடித்து உதைக்கப்பட்டதால், உயிருக்குத் தப்பி தன் குடும்பத்துடன் கனடா சென்றுள்ளார் ஹரிஷ் குமார்.

கியூபெக் மாகாணத்தில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்த இந்திய குடும்பம் இந்தியா திரும்பியது | Quebec Family Forced To Return India After 8 Years

2018ஆம் ஆண்டிலிருந்து இதுவரை குமார், அவரது மனைவி சோனிகா, பிள்ளைகள் ஜபேஷ் மற்றும் கௌலாஷ் ஆகியோர் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் வாழ்ந்துவந்தார்கள்.

இந்நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் குமார் குடும்பம் கனடாவிலிருந்து வெளியேறவேண்டும் என, ஆகத்து மாதம் 4ஆம் திகதி, அவருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி குடும்பத்துடன் கனடாவிலிருந்து வெளியேறவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதனால் இப்படி திடீரென ஒரு முடிவு என விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், வளவளவென, புரிந்துகொள்ள முடியாத நீண்ட வாக்கியங்களுடன் ஒரு கொள்கை விளக்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது கனடா எல்லை ஏஜன்சி.

இதற்கிடையில், குமார் குடும்பம் இந்தியாவுக்கு விமானம் ஏறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், கியூபெக் மாகாணம் வெளிநாட்டவர்களை வெளியேற்றுவதில் மும்முரமாக இறங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

ஆம், ஏனென்றால், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், மொத்த கனடாவிலிருந்தும் வெளியேற்றப்பட்டவர்களில் பாதி பேர் கியூபெக் மாகாணத்திலிருந்துதான் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *