இலங்கை

22வது திருத்தம் நீதித்துறை மற்றும் ஊழல் ஒழிப்புக்கான முக்கிய சீர்திருத்தம் ; ஐ.நா.வில் விளக்கமளிப்பு

நீதிமன்றக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அவசியமான சீர்திருத்தமாகவே 22வது திருத்தம் கொண்டுவரப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை சமநிலையானதும் பயனுள்ளதுமான முறையில் மதிப்பிடுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், நியாயமானதும் சமத்துவமானதுமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக இலங்கை முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு அவசியம் எனவும் சுமித் தசநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

நீதித்துறை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல், ஊழலைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் நாட்டின் நல்லாட்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *