பலதும் பத்தும்

உலகையே ஆச்சரியப்படுத்தும் ‘வாடகை மனைவி’ நடைமுறை! எந்த நாட்டில் தெரியுமா?

உலகின் பல நாடுகள் அவற்றின் தனித்துவமான கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் வித்தியாசமான நடைமுறைகளுக்காகப் பிரபலமாக அறியப்படுகின்றது.

அந்த வகையில், தாய்லாந்து அதன் அழகிய கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் இரவு நேர பொழுதுபோக்கு வாழ்க்கைக்காக உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கின்றது.

உலகையே ஆச்சரியப்படுத்தும் ‘வாடகை மனைவி’ நடைமுறை! எந்த நாட்டில் தெரியுமா? | In This Country Offers Rental Wife To The Tourists

இந்நிலையில், தாய்லாந்தின் சில சுற்றுலா மையங்களில் நீண்ட காலமாகப் பேசப்பட்டு வரும் வித்தியாசமான நடைமுறைதான் ‘வாடகை மனைவி’ (Wife Rental) என அழைக்கப்படும் தற்காலிக துணை.

‘வாடகை மனைவி’ என்ற பெயர் இருந்தாலும், இது உண்மையான அல்லது சட்டப்பூர்வமான திருமண உறவு அல்ல. மாறாக, ஒரு பெண் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு ஆணுடன் துணையாக இருந்து, அவருடன் நேரத்தைச் செலவிடும் தனிப்பட்ட ஏற்பாடாக இது கூறப்படுகிறது.

உலகையே ஆச்சரியப்படுத்தும் ‘வாடகை மனைவி’ நடைமுறை! எந்த நாட்டில் தெரியுமா? | In This Country Offers Rental Wife To The Tourists

ஒன்றாகச் சுற்றுலா செல்வது, உணவருந்துவது, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இதில் இடம்பெறலாம். இந்த நடைமுறை குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் பட்டாயா போன்ற பகுதிகளின் பொழுதுபோக்கு கலாச்சாரத்தில் இந்த நடைமுறை காணப்படுகின்றது.

கால வரையரை 

இவ்வாறு வாடகை மனை பெறுபவர்களுக்கு, சில மணிநேரங்கள் முதல் பல நாட்கள் அல்லது அதற்கும் அதிகமான காலம் வரை கால அளவு விருப்பத்துக்கேற்ப ஒழுங்கு செய்து கொடுக்கப்படுமாம்.

கட்டணம் மற்றும் பிற நிபந்தனைகள் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரின் உடன்பாட்டைப் பொறுத்து தீர்மானிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சில பெண்களுக்கு இத்தகைய ஏற்பாடுகள் வருமானம் ஈட்டும் வழியாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகையே ஆச்சரியப்படுத்தும் ‘வாடகை மனைவி’ நடைமுறை! எந்த நாட்டில் தெரியுமா? | In This Country Offers Rental Wife To The Tourists

அதே நேரத்தில், இந்த நடைமுறை பல்வேறு சமூக மற்றும் ஒழுக்க ரீதியான சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண்களைப் பொருளாகக் கருதுதல், பொருளாதாரச் சுரண்டல் மற்றும் சுற்றுலாவுடன் தொடர்புடைய பாலினச் சுரண்டல் போன்ற பிரச்சினைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

மேலும், சில சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகத் தொடங்கும் இத்தகைய உறவுகள் பின்னர் நீண்டகால தனிப்பட்ட உறவுகளாகவும் மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனால், இது வெறும் சுற்றுலா சார்ந்த ஏற்பாடாக மட்டுமின்றி, சமூக ரீதியாகவும் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக மாறியுள்ளது.

எனினும், ‘வாடகை மனைவி’ என்பது தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ திருமண முறையோ அல்லது அந்நாட்டின் பொதுவான கலாச்சார நடைமுறையோ அல்ல.  மாறாக குறிப்பிட்ட சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு சூழல்களுடன் தொடர்புடையதாகக் மட்டுமே கூறப்படும் ஒரு தற்காலிக தனிப்பட்ட ஏற்பாடாகவே பார்க்கப்படுகின்றது.

உலகையே ஆச்சரியப்படுத்தும் ‘வாடகை மனைவி’ நடைமுறை! எந்த நாட்டில் தெரியுமா? | In This Country Offers Rental Wife To The Tourists

இதற்கான கட்டணம்

வாடகை மனைவியின் கட்டணம் என்பது அந்த பெண்ணின் வயது, தோற்றம் மற்றும் கல்வி போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும். இதன் கட்டணம் சுமார் 1,600 அமெரிக்க டாலர்கள் முதல் 1,16,000 அமெரிக்க டாலர்கள்(இந்திய மடிபில் 1.5 லட்சம் முதல் 11 லட்சம்) வரை அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *