பலதும் பத்தும்

20 காதலர்களிடம் ஐபோன்களை பரிசாக பெற்ற பெண்-காதலர்களின் பரிசு சொந்த வீடாக மாறியதா?

சீனாவில் 2016ஆம் ஆண்டு வெளியான ஒரு விசித்திரமான காதல் சம்பவம், பல ஆண்டுகளுக்குப் பிறகும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

சீனாவின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த “Xiaoli” என்ற புனைப்பெயரில் குறிப்பிடப்பட்ட இளம்பெண் , தனது 20 காதலர்களிடம் இருந்து பெற்ற ஐபோன்களை விற்று வீடு வாங்கிய சம்பவம், நவீன காலக் காதல் மற்றும் பணமதிப்பு குறித்த புதிய விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் iPhone 7 மாடலை அறிமுகப்படுத்திய போது, ஷியோலி தனது 20 காதலர்களிடமும் தலா ஒரு ஐபோனைப் பரிசாகக் கேட்டுப் பெற்றுள்ளார்.

அந்த 20 ஐபோன்களையும் பயன்படுத்தாமல், ‘Hui Shou Bao’ என்ற சீன மொபைல் மறுசுழற்சி நிறுவனத்திடம் விற்று 120,000 யுவான் அப்போதைய மதிப்பில் சுமார் $18,000 டாலர் ரொக்கமாகப் பெற்றுள்ளார்.

நகர்ப்புறத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த ஷியோலி, அந்தப் பணத்தைக் கொண்டு தனது பெற்றோருக்காகக் கிராமப்புறத்தில் ஒரு புதிய வீட்டை வாங்குவதற்கான முன்பணத்தைச் செலுத்தியுள்ளார்.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ஐபோன்களை ஒரு பெண்ணிடம் இருந்து வாங்கிய பரிவர்த்தனை உண்மைதான் என ‘Hui Shou Bao’ நிறுவனம் பிபிசி (BBC) போன்ற சர்வதேச ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியது.

இந்தச் சம்பவம் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்து, சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்களையும் விவாதங்களையும் உருவாக்கியது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *