இலங்கை

பாராளுமன்றத்தில் நாளை நாமல் ராஜபக்ஷ உரை

கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நாளை செவ்வாய்க்கிழமை தனது கைது தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் நிகழ்த்தவிருந்த உரையையும் இணைத்தே பாராளுமன்றத்தில் குறித்த உரையை நிகழ்த்தவுள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு கொள்வனவு செய்யப்பட்ட எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்‌ஷ, எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் சிறைச்சாலையில் இருந்து நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுக்கு அழைத்துவரப்படவுள்ளார்.

இதன்போது அவர் தனது கைது தொடர்பிலும் மற்றும் 12ஆம் திகதி அநுராதபுர கூட்டத்தில் நிகழ்த்த எதிர்பார்த்திருந்த உரையையும் நிகழ்த்துவார். அதைப் பார்த்துக்கொண்டிருக்குமாறு நாங்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *