உலக அழகி 2026 இல் கிரீடம் சூடிய டொமினிக்கன் அழகி

2026 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி வியட்நாமில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், ‘உலக அழகி 2026’ பட்டத்தை டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஜொஹெய்ரி மொலா வென்றுள்ளார்.
அவருக்கு 2025ஆம் ஆண்டுக்கான உலக அழகியாகத் தெரிவுசெய்யப்பட்ட தாய்லாந்தின் ஓபல் சுசாதா சுவாங்ஸ்ரீ உலக அழகிக்கான கிரீடத்தைச் சூட்டினார்.
ஸ்பெயினைச் சேர்ந்த எலிசபெத் ரெய்னெஸ் முதல் ரன்னர்-அப் பட்டத்தையும், மலேசியாவின் தானுஷியா செட்டி 2-வது ரன்னர்-அப் பட்டத்தையும் பெற்றனர்.
தொழில்முறை மொடலான ஜொஹெய்ரி மொலா, இபெரோஅமெரிக்கானா பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பில் பட்டம் பெற்றுள்ளார்.
மொடலிங் துறைக்கு அப்பால் ஆசிரியையாகவும் பணியாற்றி வரும் அவர், சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘Voices of Tomorrow’ என்ற சமூக சேவைத் திட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார்.
அழகுப் போட்டியில் கிரீடம் வென்றதுடன், சமூக சேவையிலும் ஈடுபட்டு வரும் ஜொஹெய்ரி மொலாவின் வெற்றி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
![]()