நாமலை பார்க்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது; முஜிபூர் ரஹ்மான் .எம்.பி

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவை பார்க்கப் போக வேண்டிய தேவை தமக்கு கிடையாது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 80 ஆண்டு நிகழ்வுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்த போது, நாமல் ராஜபக்ஷவை பார்க்க போகவில்லையா? என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே முஜிபூர் ரஹ்மான் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாமலை பார்க்கப் போக வேண்டிய தேவை எமக்கு கிடையாது. அவர் மீது முறைப்பாடு உள்ளது. அது தொடர்பில் விசாரணைகள் நடக்கின்றன. நீதிமன்றத்தில் அதனை பார்த்துக்கொள்ள முடியும். நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம். நடக்கும் சகல விடயங்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்பல்ல. குறித்த முறைப்பாடு நல்லாட்சி அரசாங்க காலத்தில் செய்யப்பட்டதே ஆகும். இப்போது வழக்கு விசாரணைகள் நடக்கின்றன என்றார்
![]()