யாழ்.வயாவிளானில் காணி மீட்புப் போராட்டம்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 36 வருடங்களாக விடுவிக்கப்படாதுள்ள எமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி வயாவிளான் மீள்குடியேற்ற அமைப்பின் ஏற்பாட்டில் அப் பகுதி மக்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-10 மணி தொடக்கம் நண்பகல்-12 மணி வரை யாழ்.வயாவிளான் சந்தியில் வயாவிளான் மண் மீட்புக்கான கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்றைய போராட்டம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையாக முன்னெடுக்கப்பட்டது. நேற்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தில் இடம்பெயர்ந்து பல பகுதிகளிலும் வாழும் வயாவிளான் பகுதி மக்கள், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளர் நடராஜர் காண்டீபன், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்ரர், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ப. ஸ்ரீகாந், உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கவனயீர்ப்புப் போராட்டத்தின் நிறைவில் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர்.ஜெனரல் யகம்பத்திற்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் இராணுவ அதிகாரியொருவரிடம் வயாவிளான் மீள்குடியேற்ற அமைப்பினரால் நேரடியாகக் கையளிக்கப்பட்டது.
![]()