இலங்கை

12 ஆம் திகதிக் கூட்டத்தை எவராலும் தடுக்க முடியாது;  பொதுஜன பெரமுன பேச்சாளர்

12ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் நாமல் ராஜபக்‌ஷ இல்லாவிட்டாலும் நிச்சயமாக நடைபெறும், அதை யாராலும் தடுக்க முடியாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பேச்சாளரான சஞ்சீவ எதிரிமான தெரிவித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது சஞ்சீவ எதிரிமான்ன மேலும் கூறுகையில்,

2015ஆம் ஆண்டிலிருந்தே நாமல் ராஜபக்‌ஷ இதுபோன்ற பல்வேறு அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வருகிறார். இன்றும் அவர் பலமாகவும் உறுதியாகவும் இதற்கு முகம் கொடுப்பார். கடந்த 11 ஆண்டுகளாகவே அவர் இத்தகைய அரசியல் பழிவாங்கல்களைச் சந்தித்து வருகிறார். எவ்வாறாயினும் 12ஆம் தேதி கூட்டம் நிச்சயமாக நடைபெறும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *