இலங்கை

நாமல் கைது; மீண்டும் களமிறங்கும் மகிந்த – ராஜபக்ச அரசியலில் புதிய திருப்பம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மீண்டும் செயற்பாட்டு அரசியலில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச தரப்பு அரசியல்வாதிகள் பலர் அ ண்மைக்காலமாக வழக்குகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதுடன், விளக்கமறியல் உத்தரவுகளையும் எதிர்கொண்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் 2029ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கட்சி மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள அரசியல் செயற்பாடுகளில் சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக சிறிது காலமாக அரசியல் செயற்பாடுகளை விட்டும் ஒதுங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் தலைவர் என்ற ரீதியில் மீண்டும் செயற்பாட்டு அரசியலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளார்.

அதன் முதற்கட்டமாக எதிர்வரும் 12ம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள கட்சியின் முதலாவது மக்கள் போராட்ட பேரணிக்கு அவர் தலைமை தாங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

முன்னதாக குறித்த பேரணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் நடைபெற ஏற்பாடாகி இருந்த நிலைமையில், இலஞ்ச வழக்கொன்றில் தற்போதைக்கு நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறான பின்னணியில் அநுராதபுர பேரணி தொடக்கம் எதிர்வரும் 2029ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வரையான கட்சியின் செயற்பாடுகளை தலைமையேற்று முன்கொண்டு செல்ல மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *