இலங்கை

பத்து கைதிகளுடன் காவலில் நாமல்!; உடல்நிலை தொடர்பில் வெளியான அறிக்கையினால் மீண்டும் சிக்கல்

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலை வைத்தியரால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினரின் உடல்நலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு காவல் சிறைச்சாலையில் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னர் (04) திகதி கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கமைய, கொழும்பு காவல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச ஒரு சிறப்புப்பிரிவில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அவரது பாதுகாப்பை கருத்தில்கொண்டு செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், சுமார் பத்து கைதிகள் வைக்கப்பட்டுள்ள காவலில் நாடாளுமன்ற உறுப்பினர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *