உலகம்

ஹொர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்

ஹொர்முஸ் நீரிணை வழியே விதிமுறைகளை மீறிச் சென்ற 2 முதல் 5 கப்பல்கள் வரை தினமும் இரவு நேரத்தில் “தண்டிக்கப்பட்டதாக” ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார். 2026 ஆகஸ்ட் 30-ஆம் திகதி வரையிலான 10 நாட்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல்களின் பின்னரும் கூட விதிமுறைகளை மீறும் கப்பல்கள் மீது தேவையான நேரங்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரானிய புரட்சிக்கர காவல்படை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலை ஈரான் வெளியுறவு அமைச்சகம் “போர்க்குற்றம்” என கடுமையாகக் கண்டித்துள்ளது.

அத்துடன், பிராந்திய கடற்பகுதியில் அமெரிக்காவின் முற்றுகை மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்தால் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது பதிலடித் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என ஈரானிய ஆயுதப்படைகள் எச்சரித்துள்ளன.

எனினும், பிராந்திய கடற்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை இலக்கு வைத்து ஈரானிய புரட்சிகர காவல் படை பெலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியதைத் தொடர்ந்தே ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க மத்திய கட்டளையகம் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஈரானின் நதான்ஸ் (Natanz) அணுசக்தி மையத்திற்கு அருகே அமைந்துள்ள ‘பிக்அக்ஸ்’ (Pickaxe Mountain) நிலத்தடி அணுசக்தி வளாகத்தின் மீது மிக விரைவில் (very soon) தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு இத்தகைய எச்சரிக்கையை அவர் மீண்டும் விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *