இந்தியா

போரை முடிவுக்குக் கொண்டுவர எந்த வகையிலேனும் துணைநிற்போம் – உக்ரைனிடம் ஜெய்சங்கர் உறுதி

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவ இந்தியா தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தெரிவித்துள்ளார்.

கீவ் நகருக்க விஜயம் செய்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எந்த வகையிலாவது, எந்த விதத்தில் இந்தியா உதவ முடியுமோ, அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று கூறியுள்ளார்.

போரை முடிவுக்கு கொண்டுவருமாறு ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதை தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் கீவ் பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *