உலகம்

நியூயார்க் அரச பாடசாலைகளில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை

நியூயார்க் நகரத்தில்  அரசுப் பாடசாலை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

எட்டாம் வகுப்பு வரை இந்த தடை அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்படுகிறது.

குழந்தைகளின் மனநலம் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிப்பது, அத்துடன் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது போன்ற கவலைகள் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்கப் பாடசாலை அமைப்பில் ஒன்பதாம் வகுப்பு முதல்  உயர்நிலைப் பாடசாலை வரை  செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் விடயத்தை நன்கறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

அப்போதும் கூட, தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்துகொள்வது போன்ற குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு மட்டுமே அது வரையறுக்கப்படும் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button