நிகழ்வுகள்
இலண்டனில் நான்கு நூல்கள் வெளியீடு….

எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களின் ஈழப் போரில் எழுத்தாயுதம், போர்க் களத்தின் பேனாக்கள், அரபு வசந்தம், உக்ரேனிய போரும் ஊடக திரிபும் ஆகிய நான்கு நூல்கள், 2026 ஆகஸ்ட் 29ஆம் தேதி, இலண்டனில் All Hallows Community Centre, Elton Avenue, Greenford. UB6 OPR என்ற மண்டபத்தில்
சனிக்கிழமை மாலை 1700 மணி முதல் நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கு இலக்கிய ஆர்வலரும் சைவ காப்பாளருமான திரு. சிவா தம்பு அவர்கள் தலைமை தாங்குகிறார்.
பிரித்தானியாவில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில், நூல்களின் உருவாக்கப் பின்னணி, அவற்றின் சிந்தனைப் பரப்பு மற்றும் நோக்கங்கள் குறித்து நூலாசிரியர் திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் சிறப்புரை வழங்கவுள்ளார்.

![]()