உலகம்
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கான காரணம் வெளியானது

நேபாளத்தில் திடீரென ஏற்பட் வெள்ளப்பெருக்கிற்கான காரணத்தை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானல் Shishir Khanal நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் காலை 08:37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதன் விளைவாக ஏற்பட்ட பனிச்சரிவு வெள்ளப்பெருக்கை தூண்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீட்புக் குழுக்கள் இந்தத் தகவல்களை இன்னும் சரிபார்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் நேபாளத்தை போலவே சீனாவும் “பெரும் சேதத்தை” சந்தித்து வருவதாக கானல் கூறியுள்ளார்.
நேபாளம் சீனாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக கூறிய அவர், 26 காவல்துறைப் பணியாளர்கள், ஒன்பது ஆயுதமேந்திய காவல்துறைப் பணியாளர்கள் மற்றும் 44 இராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.
![]()