நிகழ்வுகள்

யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை பொறுப்பேற்பு

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகையின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு  யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது.

ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை யாழ்ப்பாணம் புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் வரவேற்கப்பட்டு, அங்கிருந்து பவனியாக புனித மரியன்னை பேராலயத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதன்போது அன்ரன் ரஞ்சித் ஆண்டகை, யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தமது பணிப்பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

குறித்த பணிப்பொறுப்பேற்பு நிகழ்வில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், நாட்டின் பல்வேறு மறைமாவட்டங்களின் ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், சர்வமதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

புதிய ஆயரின் பணிப்பொறுப்பேற்பு நிகழ்வை முன்னிட்டு யாழ். மறைமாவட்டத்தில் விசேட ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button