உலகம்

UKவில் உள்ளாட்சி மன்றங்களின் முடிவுகளை மீறிச் செயல்பட மேயர்களுக்கு அனுமதி

உள்ளாட்சி மன்றங்களின் முடிவுகளை மீறிச் செயல்பட அனுமதிக்கும் புதிய அதிகாரங்களை இங்கிலாந்து மேயர்களுக்கு பிரதமர் ஆண்டி பர்னம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரிய அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கான திட்டமிடல் முடிவுகளில் மேயர்கள் முடிவெடுப்பதற்கு ஏற்றவகையில் இந்த அதிகாரம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதற்கமைய மேயர்கள் இனி 150-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட மேம்பாட்டுத் திட்டங்கள், 15,000 சதுர மீட்டருக்கும் அதிகமான வணிக வளாகங்கள், அல்லது குறைந்தது 30 மீட்டர் உயரமுள்ள கட்டிடங்கள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்படும் எனத் தெரியவருகிறது.

அதிகாரப் பகிர்வு பெற்ற 10 மேயர்களின் ஆதரவுடன், ஐந்து ஆண்டுகளில் 1.5 மில்லியன் புதிய வீடுகளைக் கட்ட வேண்டும் என்ற அரசாங்கத்தின் இலக்கை அடைய உதவும் வகையிலும், வீடு கட்டும் பணியை விரைவுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய நடவடிக்கைகளின் கீழ், முன்கூட்டியே திட்டமிடல் அனுமதியை வழங்கவும், முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிக்க கட்டணம் வசூலிக்கவும் மேயர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button