மாத்தறை காணி முறைகேடு விவகாரம்: பஷில் ராஜபக்ஷவின் பிடியாணை ஒக்டோபர் 27 வரை நீடிப்பு

மாத்தறையில் காணியை முறைகேடாகப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை 2026 ஒக்டோபர் 27ஆம் திகதி வரை நீடிக்க மாத்தறை நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாத்தறை – பிரவுன்ஷில், எலியாகந்த வீதியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியை முறைகேடாகப் பெறப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று மாத்தறை பிரதான நீதவான் சதுரயா திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணைகளுக்கு தொடர்ந்து சமூகமளிக்காததுடன், நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ அறிக்கையையும் சமர்ப்பிக்காத மூன்றாவது சந்தேகநபரான பஷில் ராஜபக்ஷ செலுத்திய பிணைப் பணத்தை பறிமுதல் செய்ய நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும், பஷில் ராஜபக்ஷவுக்காக பிணையில் கையொப்பமிட்ட மூவருக்கும் அபராதம் விதித்த நீதவான், குறித்த அபராதத்தை செலுத்தத் தவறினால் அவர்களை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். அத்துடன், பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை 2026 ஒக்டோபர் 27ஆம் திகதி வரை நீடிக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.
![]()