பலதும் பத்தும்

பொலிஸ் அவசர சேவைக்கு வரும் தேவையற்ற அழைப்புகளை கட்டுப்படுத்த உதவும் AI

பிரித்தானியாவின் பொலிஸ் அவசர சேவைக்கு வரும் தேவையற்ற அழைப்புகளை கட்டுப்படுத்த அல்லது துண்டிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

ஆண்டுதோறும் பெறப்படும் 20 மில்லியன் அழைப்புகளில் சுமார் 20 சதவீதம், உள்ளாட்சி மன்றங்கள் போன்ற காவல்துறை அல்லாத அமைப்புகளுக்கு உரியவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பு, அழைப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து, அழைப்பாளர் வரிசையில் நுழைவதற்கு முன்பே, காவல்துறை அல்லாத விசாரணைகளைத் தானாகவே திசை திருப்பிவிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் காவல்துறைக்கு ஆண்டுதோறும் £8.5 மில்லியன் வரை சேமிக்கும் என்றும், அந்த நிதி தெருக் குற்றங்களைக் கையாள்வதில் முதலீடு செய்யப்படும் எனவும் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை உண்மையான காவல்துறை உதவி தேவைப்படும் அழைப்பாளர்கள் திசை திருப்பப்படுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button