பலதும் பத்தும்

ஒரு மாநிலத்தில் சமையலறையும், வேறு மாநிலத்தில் படுக்கையறையும் உள்ள வீடு

இந்தியாவில் ஒரு வீட்டின் 4 அறைகள் ஒரு மாநிலத்திலும், 4 அறைகள் மற்றொரு மாநிலத்திலும் அமைந்துள்ள தனித்துவமான வீடு அமைந்துள்ளது.

ஒரே வீட்டில் 2 மாநிலங்கள்

இந்தியாவில் ஒரு சில வீடுகள் அதன் வடிவமைப்பில் தனித்துவமாக இருந்தாலும், ஒரு வீடு அது அமைந்துள்ள நிலப்பரப்பு காரணமாக தனித்துவமாக பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மகராஜ்கூடா கிராமத்தில் உள்ள உத்தம் பவாரின் வீடு, மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா எல்லையில் அமைந்துள்ளது.

இவரது வீட்டில் மொத்தம் 8 அறைகள் உள்ளது. அதில் சமையல் அறை உட்பட 4 அறைகள் தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ளது. மீதமுள்ள படுக்கையறை உள்ளிட்ட அறைகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது.

அந்த வீட்டின் உள்ளே உள்ள சுவற்றில் அதன் எல்லைகள் பிரிக்கப்பட்ட அடையாளமாக கோடு வரையப்பட்டு அந்த மாநிலங்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது.

1969 ஆம் ஆண்டில் எல்லைப் பிரச்சினை தீர்க்கப்பட்டபோது, ​​பவார் குடும்பத்தின் நிலம் இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்போது இவர்களின் வீடும் பிரிக்கப்பட்டுள்ளது.

அந்த குடும்பத்தில் 13 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் இரு மாநிலத்திற்கும் வரி கட்டி வருகிறர்கள். இரு மாநில திட்டங்களாலும் பயனடைகிறார்கள். இரு மாநில பதிவுத் தகடுகளைக் கொண்ட வாகனங்களையும் வைத்திருக்கிறார்கள்.

இந்த குடும்ப உறுப்பினர்கள் வீட்டை விட்டு வெளியேறாமலேயே ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குப் பயணம் செய்கிறார்கள்.

ஆனால் இது காரணமாக இதுவரை எந்த பிரச்சினையையும் அனுபவித்தது இல்லை என வீட்டின் உரிமையாளர் உத்தம் பவார் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button